சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம் செய்ய பணம் வாங்கியதாக மண்டல மேலாளர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையில் ரூபாய் மூன்று லட்சம் கைப்பற்றபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத பணங்களும் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.