பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "சயின்ஸ் பிக்ஷன் திரில்லர்" படம் '2.0'. இதில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
3டி தொழில்நுடப்பத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது.
இந்த படம் வெளியான முதல் நாளிலே 100 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது. இந்தியாவில் மட்டும் 73 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்தியாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில், '2.0' படம் வெளியான 8வது நாளான இன்றுவரை ரூ.500 கோடிக்கும் மேல் வசூல்சாதனை செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.