இந்த விருதுகளுக்கு கடந்த 2017 அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 2018 செப்டம்பர் 30 செப்டம்பர் 2018 வரை வெளிவந்த பாடல்களை விருது குழு கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த ஆல்பம் என்று சுமார் 82 கேட்டகிரிகளில் விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.
61-வது கிராமி சிறந்த பாடலுக்கான விருதை சைல்டிஷ் கேம்பினோவின் 'திஸ் இஸ் அமெரிக்கா' (Childish Gambino-This is america) வெற்றி பெற்றள்ளது.
இன்றை விழாவில் முதல் முறையாக கே-பாப் என்ற கொரிய பாப் இசைக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
சமீபகாலமாக இந்தியா உட்பட அநேக நாடுகளில் கே-பாப் இசை பிரபலமடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
விருது விழாவை கேமிலா கேபேலோ ரிக்கி மார்டின் மற்றும் கியூபா டிரம்பேட் இசைக் கலைஞரான ஆர்ட்ரோ சண்டலோவின் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பிரபல பாடகரும் பாடலாசிரியருமான அலிஸா கீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.