ம.தி.மு.க. சார்பில் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலய வளாகத்தில் 'தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா' நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் அண்ணா அறிவாலயத்தில் வைகோ வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழரின் தொன்மையும், சீர்மையும் கலைஞர் உரை என்னும் தலைப்பில் மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் சே.வீரபாண்டியன் எழுதியுள்ள நூலை வெளியிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என்று தெரிவித்தார்.
பின்னர் துரைமுருகன் தோழமை கட்சிகளின் கூட்டணி பற்றி தெரிவித்தக் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ' எனக்கு ஒன்றும் தெரியாது' எனப் பதிலளிக்க மறுத்தார்.
இந்த சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் தேசிய செயலாளர் காதர் மொய்தீன் உடனிருந்தார்.