தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரித்விகா. பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி மற்றும் டார்ச்லைட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதோடு, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். ரித்விகா எந்த சாதி என்று இணையவாசிகள் கூகுளில் அதிகம் தேடுவதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் ரித்விகா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா… என்று கூறியுள்ளார்.