கோப்புப்படம்
பிரபல இணைய வர்த்தக நிறுவனமான ஸ்நாப் டீல். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 50 ஆயிரம் புதிய சில்லறை விற்பனையாளர்களw இணைந்துக் கொண்டுள்ளது.
அதில், பெரும்பாலானோர் ஆடை, அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள்.
அதேபோல், புதிதாக சேர்ந்தவர்களில் இரண்டாயிரம் பேருக்கு மேல், சேர்ந்த நான்கே மாதத்தில், மாதம் 10 லட்சத்துக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அமேசானும் பிலிப்கார்டும் வாடிக்கையாளர்கள் நலன் மீது தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர். தங்களது இணையதளம் மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் நலன் குறித்தோ, பணியாளர்கள் நலன் குறித்தோ பெரிதும் கண்டுகொள்வதில்லை.
ஸ்நாப் டீல் இந்த புள்ளியில் தான் இவர்களிடமிருந்து வேறுபடுகிறது. விற்பனையாளர்களின் வருமானத்தை பெருக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
வாடிக்கையாளர்கள் எந்த பொருளை விரும்புகிறார்கள், எந்த பகுதியில் எந்த பொருள் அதிகம் விறபனையாகிறது, அதற்கு என்ன விலை நிர்ணயிக்கலாம், பகுதிவாரியாக நிலவும் தொழிற்போட்டி போன்ற தகவல்களை விற்பனையாளர்களுக்கு வழங்குகிறது.
இது அவர்கள் தொழிலை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அதேபோல், விற்பனையாளர்களுக்கு ஆகும் செலவையும் ஸ்நாப் டீல் கணிசமாக குறைக்கிறது.
இதன் மூலம், ஸ்நாப் டீலில் ஒரு பொருளை விற்பனை செய்வதற்கு ஆன செலவை விட தற்போது மூன்றில் இரண்டு மடங்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.