மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தர்ம போராட்ட தீக்ஷா (நீதிக்கான நீண்ட போராட்டம்) என்ற பெயரில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதற்கு ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, சந்திரபாபு நாயுடுவிற்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
முன்னதாக சந்திரபாபு நாயுடு கடந்த 2013-ஆம் ஆண்டு டெல்லியில் போராட்டம் நடத்தினார். ஐந்து நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.