தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடத்தினால், தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கும் கூடுதல் பனிச்சுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இதனால் கூடுதல் பணிகளை கவனிக்க கூடுதலாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளான பாலாஜி மற்றும் ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பணிக்காலம் ஒரு ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐஏஎஸ் பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். ராஜாராமன் மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.