இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இது கடந்த முறை சிங்கப்பூரில் நடைப்பெற்றது. இதை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 2018-க்கான கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் அர்ஜென்டினாவின் புவனோஸ் எயர்ஸ் நகரில் நடக்கிறது. இந்த போட்டி இன்று தொடங்கி அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது.
உலகத்தில் உள்ள 206 நாடுகளை சார்ந்த வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தயாராக உள்ள நிலையில், இது குறித்து கூகுள் தனது டூடுளில் வைத்து, சிறப்பித்துள்ளது.