photo: apple.com
சீனாவை அடுத்து இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையாக திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் புதிய ஸ்மார்ட்போன்களை மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் ஆப்பிள் மட்டும் தனது தரம் மற்றும் பிராண்டை காரணம் காட்டி இதுவரை விலையை குறைத்ததில்லை. ஆனால் கேஷ் பேக் ஆபர் என்ற பெயரில் அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை விட குறைந்த விலையில் ஆப்பிள் போனை இப்போது வாங்க முடியும்.
கேரளாவைச் சேர்ந்த TechPP நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ரூ.25,999க்கு விற்பனையாகி வரும் 16ஜிபி மாடல் ஐபோன் எஸ்இ மொபைல் போனை ரூ.19,9999க்கு வாங்கலாம். இதேபோல் ரூ.44,000க்கு விற்பனையாகி வரும் 64ஜி மாடல் ஐபோன் எஸ்இ மொபைலை ரூ.39,0000க்கு வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.
ஆனால் டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு மூலமாக வாங்கினால் மட்டுமே இந்த கேஷ் பேக் ஆஃபர் சலுகை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அதேநேரம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுக்கு இந்த ரூ.5000 கேஸ்பேக் சலுகை கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்த கேஸ் பேக் தொகை ஐபோன் எஸ்இ வாங்கும் வாடிக்கையாளர்கள் கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளது. அதேநேரம் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலம் ஈஎம்ஐயில் வாங்கினால் இந்த ஆஃபர் கிடையாது என்று அறிவித்துள்ளது.