கோப்புப்படம்
அப்படி அவன் செய்யும் ஒவ்வாரு வேலைக்காகவும் கண்டுபிடித்த ரோபோக்கள் ஏராளம். தற்போது கண்டுபிடித்திருக்கும் ரோபோ செய்யப்போகும் வேலை என்ன தெரியுமா ? உணவு டெலிவரி செய்யும் வேலை.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வாலென்யா தெருவில் மெதுவாக ஊர்ந்து செல்லும் இந்த ரோபோவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ரோபோ செயல்படுகிறதா என்பது குறித்து தெளிவாக தகவல்கள் இல்லை.
இது தொடர்பான இரண்டு புகைப்படங்களை Yelp/Eat24 என்ற நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. லேடார் மற்றும் கேமராக்கள் ரோபோவின் உடம்பில் உள்ளது. ஒரு பெண் அதன் பின்புறம் பிளே ஸ்டேசன் கன்ட்ரோலுடன் பின்தொடர்ந்து வருகிறார்.
இந்த ரோபோ வருகை உறுதியாகும் பட்சத்தில், மனிதன் தனக்கான இன்னொரு வேலையை இழக்கப் போகிறான் என்பது மட்டும் உண்மை.