அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 62வது நினைவு நாளையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நாளில் மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். இறையாண்மை உள்ள மதசார்பற்ற இந்தியாவை கட்டமைக்க வேண்டும். இதுதான் புரட்சியாளர் அம்பேத்கரின் எண்ணம். அதற்கு மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்றார்.
மேலும் ராஜஸ்தான் மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கும் என்று கூறியதற்கு பதிலளித்த அவர்,
பாஐக ஆட்சிக்கு வந்தால் அவ்வாறு தான் செய்வார்கள். மேலும் உடன்கட்டை ஏறுதலை அங்கீகரிக்கும் சனாதன கொள்கைகள் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஆபத்து.
ராகுல் கோயிலுக்கு செல்வது இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளத்தான் பாஜக போல் மதவெறியை காங்கிரஸ் தூண்டியதில்லை. ஏரி குளங்களில் வேண்டுமானால் தாமரையை மலரச் செய்யலாம். அரசியல் களத்தில் தாமரையை மலர வைக்க முடியாது என்றார்.
மேலும், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்திய விருது பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை கூறிய அவர், நெல் ஜெயராமன் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 62வது நினைவு நாளையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நாளில் மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். இறையாண்மை உள்ள மதசார்பற்ற இந்தியாவை கட்டமைக்க வேண்டும் இதுதான் புரட்சியாளர் அம்பேத்கரின் எண்ணம் அதற்கு மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்றார்.
மேலும் ராஜஸ்தான் மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கும் என்று கூறியதற்கு பதிலளித்த அவர் பாஐக ஆட்சிக்கு வந்தால் அவ்வாறு தான் செய்வார்கள்.
மேலும் உடன்கட்டை ஏறுதலை அங்கீகரிக்கும் சனாதன கொள்கைகள் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஆபத்து. ராகுல் காந்தி கோவிலுக்கு செல்வது இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளத்தான் பாஜக போல் மதவெறியை காங்கிரஸ் தூண்டியதில்லை. ஏரி குளங்களில் வேண்டுமானால் தாமரையை மலரச் செய்யலாம் அரசியல் களத்தில் தாமரையை மலர வைக்க முடியாது என்றார்.
மேலும், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்திய விருது பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை கூறிய அவர், நெல் ஜெயராமன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.