அரூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இராஜமானிக்கம் உடல் நலக்குறைவால் காலமானார்.
தருமபுரி மாவட்ட அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆர்.இராஜமாணிக்கம் வயது 76. இவர் கடந்த 1984 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், அரூர்(தனி) தொகுதியில் போட்டியிட்டி 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்
1987-ம் ஆண்டில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் உயிரிழந்த பிறகு, அ.தி.மு.க., ஆட்சி கலைந்ததால், இவர் தனது பதவியை இழந்தார்.
அ.தி.மு.க., தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாலராக பதவி வகித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக டி.டி.வி., அணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்ச பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென காலமானார்.
இவரக்கு தவமணி என்ற மனைவியும், ராஜா, சம்பத், முருகன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர், அ.ம.மு.க.,வில் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ ஆர்.ஆர்.முருகன் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.