பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக வாயிற்கூட்டம் நடைபெற்றது.
இந்த வாயிற் கூட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கச் செயலாளர் யோகராஜா தலைமை வகித்தார். தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சிஐடியூ தலைவர் ராசேந்திரன் வரவேற்றார்.
வாயிற் கூட்டத்தில் விவசாய தொழிலாளர்களை அரசு பாதுகாக்க கோரியும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே சம்பள உயர்வு பேச்சு வார்த்தை நடத்த கோரியும் பேசினர்
வாயிற்கூட்டத்தில் நிர்வாகிகள் வேலுச்சாமி, இளங்கோவன், செல்வராசு,சக்திவேல், ராமச்சந்திரன், செல்வகுமார், ஜெகநாதன், சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
//