கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டியில் பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், ஆண்டிற்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில், கோயிலில் வைக்கப்பட்டிருந்த மூன்று உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில், 11 லட்சத்து 76 ஆயிரத்து 690 ரூபாய் ரொக்க பணம், 150 கிராம் தங்க நகைகள், 170 கிராம் வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரிய வந்தது.
கோயில் தக்கர் திருஞானசம்பந்தர், செயல் அலுவலர் அமுதசுரபி, ஆய்வாளர்கள் சத்யா, வளர்மதி, கோவிந்தராஜ் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.